இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபார திறனை வெளிப்படுத்தினர். இதில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் கேரளாவின் கோஸ்டா நமோயினெசு கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் நட்சத்திர வீரர் வால்ஸ்கீஸ் 36ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஜோர்டன் முர்ரே ஆட்டத்தின் 79, 82 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
பின்னர் விடா முயற்சியோடு போரடிய ஜாம்ஷெட்பூர் அணியின் வால்ஸ்கீஸ் 84 நிமிடத்தில் கோலடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். இருப்பினும் இறுதிவரை போராடிய ஜாம்ஷெட்பூர் அணியால் அதன்பின் கோலடிக்க முடியவில்லை.
-
...AND BREATHE! 😅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A rollercoaster of a game ends with us taking those important 3️⃣ points! 😍#JFCKBFC #YennumYellow pic.twitter.com/TTUuqC8ElS
">...AND BREATHE! 😅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 10, 2021
A rollercoaster of a game ends with us taking those important 3️⃣ points! 😍#JFCKBFC #YennumYellow pic.twitter.com/TTUuqC8ElS...AND BREATHE! 😅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 10, 2021
A rollercoaster of a game ends with us taking those important 3️⃣ points! 😍#JFCKBFC #YennumYellow pic.twitter.com/TTUuqC8ElS
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-2 என்ற கோல்கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் 10ஆவது இடத்தில் நீடித்துவருகிறது.
-
Points shared with the Juggernauts.#AllInForChennaiyin #CFCOFC pic.twitter.com/k81InbcQZF
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Points shared with the Juggernauts.#AllInForChennaiyin #CFCOFC pic.twitter.com/k81InbcQZF
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 10, 2021Points shared with the Juggernauts.#AllInForChennaiyin #CFCOFC pic.twitter.com/k81InbcQZF
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 10, 2021
முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் லீக் ஆட்டம் கோலேதுமின்றி டிராவில் முடிந்தது.
இதையும் படிங்க: 'இது மிகப்பெரும் அவமானம்; எங்கள் ரசிகர்களை நான் வெறுக்கிறேன்' - ஜஸ்டின் லங்கர்