ETV Bharat / sports

ஐஎஸ்எல் : நார்த் ஈஸ்ட்டை எதிர்கொள்ளும் ஹைதராபாத்!

author img

By

Published : Jan 8, 2021, 9:54 AM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.

ISL 7: NorthEast looking to turn around season against rejuvenated Hyderabad

கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. திலக் மைதான் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

ஹைதராபாத் எஃப்சி

சீசன் தொடக்கத்தை வெற்றியுடன் ஆரம்பித்த ஹைதராபாத் எஃப்சி அணி, அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் சரிவர செயல்படாமல் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து சென்னையின் எஃப்சி உடனான முந்தையப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 3 வெற்றி, மூன்று தோல்வி, மூன்று டிரா என புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இன்றையப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நார்த் ஈஸ்ட் யுனைடெட்

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் நடப்பு சீசனில் பங்கேற்ற 9 லீக் போட்டிகளில் 2 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் ஏழாவது இடத்தில் உள்ளது.

வலிமையான அட்டாக்கிங் வீரர்களைக் கொண்டுள்ள நார்த் ஈஸ்ட் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அசத்தும் என அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அணிகளின் வீரர் தக்கவைப்புக்கான காலக்கெடுவை விதித்தது ஐபிஎல் நிர்வாகக் குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.