ETV Bharat / sports

ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த கோவா - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற எஃப்சி கோவா - ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ISL 7: Murgaonkar saves blushes for Goa against 10-men East Bengal

author img

By

Published : Jan 6, 2021, 10:52 PM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தி எஃப்சி கோவா அணி - ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க முயற்சி செய்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்புத் தொற்றிக்கொண்டது. இதில் ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் பிரைட் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் தேவேந்திர முர்கான்கர் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை உண்டாக்கினார்.

  • Some breathtaking saves from Debjit and a sublime goal from Bright to break the deadlock in the 79th minute kept us in the hunt for 3 points, despite being down to 10 men. But @FCGoaOfficial equalised in the 80th minute through Devendra.

    FT: SCEB 1-1 FCG#SCEBFCG #WeAreSCEB pic.twitter.com/MI5jjcmKeb

    — SC East Bengal (@sc_eastbengal) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளைப் பெற்று எஃப்சி கோவா அணி 3ஆவது இடத்திலும், 7 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் அணி 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: 'மும்பையின் பிராட்மேன் சுனில் கவாஸ்கர்’ - ரவி சாஸ்திரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.