இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று (ஜன.19) நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் எஃப்சி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஹைதராபாத் எஃப்சி:
கடந்த ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஹைதராபாத் எஃப்சி அணி, இந்த சீசனின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வி, 4 போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இதன்மூலம் 16 புள்ளிகளைப் பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒடிசா எஃப்சி:
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் ஒடிசா எஃப்சி அணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒடிசா அணி அதில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இதனால் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற்று யார் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி: அர்ஜென்டினாவுடன் டிராவில் போட்டியை முடித்த இந்தியா!