ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.22) நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - பெங்களூரு எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியின் சில்வா ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட பெங்களூரு அணியின் ஜூவானன், ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இதனையடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய கோவா அணியின் இகோர் அங்குலோ, ஆட்டத்தின் 66 மற்றும் 69ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை அடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலடிக்க தவறினர்.
-
Full-Time | #FCGBFC #HeroISL 2020-21 gets its first draw as @FCGoaOfficial fight back to hold @bengalurufc 🤝#LetsFootball pic.twitter.com/mkFBp81SGj
— Indian Super League (@IndSuperLeague) November 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Full-Time | #FCGBFC #HeroISL 2020-21 gets its first draw as @FCGoaOfficial fight back to hold @bengalurufc 🤝#LetsFootball pic.twitter.com/mkFBp81SGj
— Indian Super League (@IndSuperLeague) November 22, 2020Full-Time | #FCGBFC #HeroISL 2020-21 gets its first draw as @FCGoaOfficial fight back to hold @bengalurufc 🤝#LetsFootball pic.twitter.com/mkFBp81SGj
— Indian Super League (@IndSuperLeague) November 22, 2020
இதனால் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள நான்காவது லீக் ஆட்டத்தில் எஃப்சி ஒடிசா அணி - ஹைதராபாத் எஃப்சி அணியுடன் மோதவுள்ளது.
இதையும் படிங்க:‘ஆஸ்திரேலிய தொடரைக் கைப்பற்ற இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது’ - விவிஎஸ் லக்ஷ்மன்!