இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
பரபரப்பாகத் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் ஆட்டத்தைக் கையிலெடுத்தனர். இதன் பயணாக, ஈஸ்ட் பெங்கால் அணியின் அந்தோணி 24ஆவது நிமிடத்திலும், ரவி குமார் 36ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒடிசா அணியின் சைலுங் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பொங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரத்திறனை வெளிப்படுத்திய ஒடிசா அணியின் பால் ராம்ஃபாங்சாவா ஆட்டத்தின் 49, 65 ஆகிய நிமிடங்களிலும், ஜெர்ரி ஆட்டத்தின் 51, 67ஆவது நிமிடங்களிலும், டியாகோ மௌரிவியா ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்திலும் கோல் மழையைப் பொழிந்து அசத்தினர்.
ஆனால், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல ஈஸ்ட் பெங்கால் அணியின் ஆரோன் அமதியும், ஜேஜேவும் கோல்கள் அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தனர்.
இருப்பினும், ஆட்டநேர முடிவில் ஒடிசா எஃப்சி அணி 6-5 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. அதுமட்டுமின்றி இப்போட்டியில் இரு அணிகளும் சேர்ந்த 11 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான்காவது டெஸ்டிலிருந்து பும்ரா விலகல்!