இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே (கொல்கத்தா) அணி, எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் களமிறங்கியது.
குறிப்பாக, 60ஆவது நிமிடத்தில் கோவா வீரர் மொர்டாடா கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தர, 64ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜஸ்டின் கோல் அடித்து பதிலடி தந்தார். அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே கோவா வீரர் ஃபரொன் அசத்தலான கோல் அடிக்க, கொல்கத்தா ரசிகர்களின் கொண்டாட்டம் அமைதியானது.
-
End-to-end football, decided by a trademark Corominas finish! 🤩
— Indian Super League (@IndSuperLeague) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's tonight's #ISLRecap 📹
Full match highlights: https://t.co/I6LJoZSQdH#FCGATK #HeroISL #LetsFootball pic.twitter.com/pxUXddSXpk
">End-to-end football, decided by a trademark Corominas finish! 🤩
— Indian Super League (@IndSuperLeague) December 14, 2019
Here's tonight's #ISLRecap 📹
Full match highlights: https://t.co/I6LJoZSQdH#FCGATK #HeroISL #LetsFootball pic.twitter.com/pxUXddSXpkEnd-to-end football, decided by a trademark Corominas finish! 🤩
— Indian Super League (@IndSuperLeague) December 14, 2019
Here's tonight's #ISLRecap 📹
Full match highlights: https://t.co/I6LJoZSQdH#FCGATK #HeroISL #LetsFootball pic.twitter.com/pxUXddSXpk
இறுதியில், கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், எஃப்சி கோவா அணி விளையாடிய எட்டு போட்டிகளில், நான்கு வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வி என 15 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மறுமுனையில், கொல்கத்தா அணி எட்டு ஆட்டங்களில் நான்கு வெற்றி, இரண்டு டிரா, இரண்டு தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் ஏழு வயது சிறுவனைத் தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!