இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், கொச்சியில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்.சி. அணி, ஒடிசா எஃப்.சி. அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல்பாதியின்போது இரு அணிகளிலிருந்தும் மூன்று வீரர்கள் காயம் காரணமாக மாற்றப்பட்டனர். குறிப்பாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் ஜெய்ரோ ரோட்ரிகஸ், ரஃபேல் மெஸ்ஸி பவ்லி, ஒடிசா வீரர் அரிடேன் சன்டானா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இருப்பினும், இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏரளமாகக் கிடைத்தாலும் அவர்களால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. இதனால், இப்போட்டி கோலின்றி சமனில் முடிந்தது. சொந்த மண்ணில் விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எஃப்.சி. அணிக்கு அழுத்ததைத் தந்து விளையாடியது. இருப்பினும், ஒடிசா அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
-
Individual brilliance from @sahal_samad! 👌
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch #KERODI LIVE on @hotstartweets - https://t.co/uiisG0kJzV
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/1qDUeHKFKh
">Individual brilliance from @sahal_samad! 👌
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019
Watch #KERODI LIVE on @hotstartweets - https://t.co/uiisG0kJzV
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/1qDUeHKFKhIndividual brilliance from @sahal_samad! 👌
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019
Watch #KERODI LIVE on @hotstartweets - https://t.co/uiisG0kJzV
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/1qDUeHKFKh
இதனிடையே, இப்போட்டியில் நடுவரின் அலட்சியத்தால் கேரளா அணிக்கு இரண்டு பெனால்டி கிடைக்கவில்லை. 35ஆவது நிமிடத்தில் கேரள வீரர் சஹால் அப்துல் சமாத் ஒடிசா அணியின் நான்கு வீரர்களைக் கடந்து கோல் அடிக்க முயற்சித்தார். அப்போது, பாக்ஸிலிருந்த ஒடிசா அணியின் தடுப்பாட்டாக்காரர் நாரயண் தாஸ் அவரை கீழே தள்ளிவிட்டார்.
ஃபவுல் காரணமாக கேரள அணிக்கு பெனால்டி கிடைக்கும் என எதிர்பார்த்தபோது நடுவர் கேரள அணிக்கு பெனால்டி தரவில்லை. அதேபோல, 68ஆவது நிமிடத்தில் மற்றொரு கேரள வீரர் முகமது ரகிப் அடித்த பந்து ஒடிசா அணியின் தடுப்பாட்டக்காரர் நாரயண் தாஸின் கையில்பட்டது.
இது ஹேண்ட் பால் என லைன் அம்பயர்களுக்கு தெளிவான பார்வை இருந்தும் அவர்கள், அதை கண்டுகொள்ளாமல் விட்டனர். இந்த இரண்டு அலட்சியத்தால் இப்போட்டியின் முடிவு கேரள அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்தச் சீசனில் அந்த அணி தொடர்ந்து சமனில் செய்யும் மூன்றாவது போட்டி இதுவாகும்.
-
Which was the best moment of the match? 🤔
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch the full highlights 👉 https://t.co/AnTJHuAI8u#ISLRecap #KERODI #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/0ZgU3HH4RJ
">Which was the best moment of the match? 🤔
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019
Watch the full highlights 👉 https://t.co/AnTJHuAI8u#ISLRecap #KERODI #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/0ZgU3HH4RJWhich was the best moment of the match? 🤔
— Indian Super League (@IndSuperLeague) November 8, 2019
Watch the full highlights 👉 https://t.co/AnTJHuAI8u#ISLRecap #KERODI #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/0ZgU3HH4RJ
இதுவரை கேரள அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று சமன் என நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மறுமுனையில், ஒடிசா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு சமன் என நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட், பார்சிலோனா... வரிசையில் சாதனைப் படைத்த யுவென்டஸ்