இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம்வருபவர் ரோஹித் சர்மா. ஸ்பெயினின் பிரபல கால்பந்து தொடரான லாலிகாவுக்கு இந்தியாவின் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரோஹித் ஃபேஸ்புக் நேரலை மூலம் லாலிகாவின் அதிகாரப்பூர்வ நெறியாளர் ஜோ மோரிசனுடன் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது பேசிய ரோஹித், ‘நான் கால்பந்து விளையாட்டுக்கு மிகப்பெரும் ரசிகன். கிரிக்கெட்டைவிட எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது கால்பந்து மட்டும்தான். நான் ஒவ்வொரு முறை வீட்டிலிருக்கும்போதும் கிரிக்கெட் பார்ப்பதைவிட, கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதைத்தான் வாடிக்கையாக கொண்டுள்ளேன். ஏனெனில் இது மிகவும் திறமையான விளையாட்டு, அதனால்தான் நான் கால்பந்து விளையாட்டைக் காண்பதை விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
பின் நெறியாளர் ரோஹித்திடம், நீங்கள் கால்பந்து விளையாட்டில் விளையாடுவதாக இருந்தால், மைதானத்தின் எந்த இடத்தில் விளையாட ஆசைப்படுவீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரோஹித், ‘நான் கால்பந்து விளையாட்டில் விளையாடினால், மிட்ஃபீல்டராக விளையாடுவேன். ஏனெனில் எனக்கு ஓடுவதற்கு பிடிக்காது. அதனால் நான் ஒரு அட்டாக்கிங் மிட்ஃபீல்டரும் கிடையாது. மேலும் மிட்ஃபீல்டர் பணியானது கால்பந்தில் இன்றியமையாதது. ஏனெனில் அவர்தான் அணி வீரர்கள் கோலடிக்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்துவார்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘இங்கிலாந்து கிரிக்கெட்டை உயர்த்த ஐபிஎல் உதவியது’ - ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!