கொரோனா வைரசால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று முதல் மார்ச் 31வரை ஐ லீக் கால்பந்து தொடரின் அனைத்துப் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்திருந்தது. இதனிடையே, நேற்றைய லீக் போட்டியில் நெரோக்கா - சென்னை சிட்டி எஃப்சி அணிகள் மோதின.
ஒருவேளை கொரோனாவால் ஐ லீக் சீசன் கைவிடப்பட்டால், இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவிப்பின்படி இப்போட்டிதான் நடப்பு சீசனின் கடைசிப் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்களின்றி நடைபெற்ற இப்போட்டியின் முதல் நிமிடத்திலேயே நெரோக்கா வீரர் கங்கம் ஹோரம் கோல் அடித்து அசத்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் சென்னை சிட்டி அணி அட்டாக்கிங் முறையில் விளையாடியது.
இதனால், 21ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் மஷூர் ஷெரிஃப் கோல் அடித்தார். பின்னர், ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் மிரண்டா கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் நெரோக்கா அணி கோல் அடிக்கத் தவறியதால் இப்போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
-
Philip Adjah’s late penalty rescues 🙌🏻 a point for relegation-threatened @NerocaFC 🟠
— Hero I-League (@ILeagueOfficial) March 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read more 👉🏻 https://t.co/orlytiHP55#HeroILeague 🏆 #IndianFootball ⚽️ #LeagueForAll 🤝 #NFCCCFC ⚔️ pic.twitter.com/jpVYjlt8Nn
">Philip Adjah’s late penalty rescues 🙌🏻 a point for relegation-threatened @NerocaFC 🟠
— Hero I-League (@ILeagueOfficial) March 14, 2020
Read more 👉🏻 https://t.co/orlytiHP55#HeroILeague 🏆 #IndianFootball ⚽️ #LeagueForAll 🤝 #NFCCCFC ⚔️ pic.twitter.com/jpVYjlt8NnPhilip Adjah’s late penalty rescues 🙌🏻 a point for relegation-threatened @NerocaFC 🟠
— Hero I-League (@ILeagueOfficial) March 14, 2020
Read more 👉🏻 https://t.co/orlytiHP55#HeroILeague 🏆 #IndianFootball ⚽️ #LeagueForAll 🤝 #NFCCCFC ⚔️ pic.twitter.com/jpVYjlt8Nn
ஆனால், 90ஆவது நிமிடத்தில் நெரோக்கா அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கார்னர் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தி பிலிப் அட்ஜா கோலாக்கினார். பின்னர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90+6) சென்னை கோல்கீப்பர் நவ்செத் சந்தானா ஃபவுலில் ஈடுபட்டதால் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் வழங்கினார். இறுதியில் இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் நெரோக்கா அணி 17 போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு டிரா, எட்டு தோல்வி என 19 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், சென்னை சிட்டி அணி 16 போட்டிகளில் ஐந்து வெற்றி, ஆறு டிரா, ஐந்து தோல்வி என 21 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் கால்பந்து: கோப்பையை வென்று சாதனைப்படைத்த கொல்கத்தா!