ETV Bharat / sports

'ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கவில்லை; முன்பைவிட அதிக ஃபிட்டாக உணருகிறேன்' - சேத்திரி - sunil best speeches

கொல்கத்தா: ஓய்வுபெறுவது குறித்து தான் இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் முன்பு எப்போதும் இல்லாததைவிட இப்போது அதிக உடல் கட்டுக்கோப்புடன் இருப்பதாக இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்திரி தெரிவித்துள்ளார்.

sunil Chhetri
sunil Chhetri
author img

By

Published : Jun 13, 2020, 7:30 AM IST

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி (35) இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முகநூல் பக்கத்தில், அளித்த பேட்டியில்,

"நான் என் கனவை வாழ்ந்து கொண்டிருக்கேன்!, நான் கால்பந்து விளையாட தொடங்கி பதினைந்து வருடங்கள் முடிவடைகிறது. 2005இல் என் முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது நினைவுக்கு வருகிறது.

சமூக வலைத்தளங்களில், நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று பரவலாக கேள்விகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதனைப் பார்த்துவிட்டு என் மனைவி சோனம் என்னிடம் கேட்டபோது, ஓய்வு பெறுவது குறித்து இன்னும் நான் யோசிக்கவில்லை, முன்பைவிட இப்போது அதிக உடல் கட்டுக்கோப்புடன் உணருகிறேன் என்றேன்.

யாருக்கு தெரியும் இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு இருக்கலாம்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், "வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கால்பந்து போட்டிகள் தொடங்கலாம். அல்லது மேலும் காலதாமதமானாலும், எங்களது போட்டிகள் கத்தார், வாங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இது நடந்தால்தான் ஐபிஎல் உலக தரத்திற்கு முன்னேறும் - கேகேஆர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.