ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7ஆவது சீசன் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான டிஃபென்ஸை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணிக்கு ஜோயல் ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்திலும், நர்ஸரி அட்டத்தின் 53, 79ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தும் அணியை முன்னிலைப்படுத்தினர்.
பின்னர் சென்னை அணியின் அனிருத் தபா ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆறுதல் அளித்தார். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுதிய ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் விக்டர் மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது.
-
FULL-TIME in #CFCHFC! The new year brings better luck to Hyderabad. Stunning goals from Halicharan Narzary and Joao Victor steal the show and HFC are back to winning ways!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/nunCVDnXAb
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FULL-TIME in #CFCHFC! The new year brings better luck to Hyderabad. Stunning goals from Halicharan Narzary and Joao Victor steal the show and HFC are back to winning ways!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/nunCVDnXAb
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021FULL-TIME in #CFCHFC! The new year brings better luck to Hyderabad. Stunning goals from Halicharan Narzary and Joao Victor steal the show and HFC are back to winning ways!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/nunCVDnXAb
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021
இதனால் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் எஃப்சி அணி 12 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் 6ஆவது இடத்திற்கும் முன்னேறியது.
இதையும் படிங்க:வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாடும் ஷகிப் அல் ஹசன்!