ETV Bharat / sports

ஐ லீக் கால்பந்து : கோப்பையைக் கைப்பற்றக் காத்திருக்கும் மோகன் பகன்! - மோகன் பகன்

நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரண்டாவது முறையாக மோகன் பகன் அணி ஐ லீக் கால்பந்து கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

how-soon-can-mohun-bagan-win-the-i-league-title

author img

By

Published : Mar 3, 2020, 6:58 PM IST

இந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் கவுரவமான கோப்பையாக ரசிகர்களால் கருதப்படும் ஐ லீக் கால்பந்துத் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. அதில் இதுவரை டெம்போ அணி மூன்று முறையும், சர்ச்சில் பிரதர்ஸ், பெங்களூரு அணி தலா இரண்டு முறையும், மோகன் பகன் அணி ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. கடந்த ஆண்டு சென்னை சிட்டி எஃப்.சி. அணி ஐ லீக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதில் மோகன் பகன் அணி ஒரு முறை மட்டுமே கோப்பையைக் கைப்பற்றியிருந்தாலும், மூன்று முறை இரண்டாவது இடத்தை நிறைவு செய்துள்ளது. அந்த அணிக்கு இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்த ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்துத் தொடரில் மோகன் பகன் அணி ஆடிய 14 போட்டிகளில் 11 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 35 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மூன்று முறை கைகளுக்கு அருகிலிருந்த கோப்பையை தவறவிட்ட மோகன் பகன் அணி, இம்முறை அசாத்திய சாகசங்களுடன் கோப்பையை நெருங்கி வருகிறது.

மோகன் பகன் அணியின் பயிற்சியாளர் கிபு
மோகன் பகன் அணியின் பயிற்சியாளர் கிபு

பயிற்சியாளர் கிபு விகுனாவின் வழிகாட்டுதலில் மோகன் பகன் அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு எந்த அணியாலும் ஈடுகொடுக்கமுடியவில்லை. அதிலும் அந்த அணியின் ஃபிரான்சிஸ்கோவும், பாபா தியாவராவும் எதிரணியின் தடுப்பாட்டத்தை அசால்ட்டாக கடந்து கோல் அடிப்பது ஐ லீக் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது என ரசிகர்கள் கூறூகின்றனர்.

இன்னும் 6 போட்டிகளில் ஆடவுள்ள மோகன் பகன் அணி இரு போட்டிகளில் வெற்றிபெற்றாலே கோப்பையை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பின் மினெர்வா, சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் அடுத்தடுத்து உள்ளன.

ஆனால் மோகன் பகன் அணி தற்போது உள்ள ஃபார்மில் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கால்பந்து: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கேரளா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.