நட்சத்திரக் கால்பந்து வீரர் ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணியிலிருந்து விலகி ஜுவண்டஸ் அணியில் இணைந்த பின்னர், ரியல் மேட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே உள்ளிட்ட முக்கிய தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ஒரே சீசனில் இரண்டு பயிற்சியாளர்களை மாற்றியும் எவ்வித பயனுமில்லை. இதனையடுத்து ரியல் மேட்ரிட் அணியை மறுபடியும் கட்டமைக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் செல்சீ அணிக்காக 2012ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக ஆடிவரும் ஈடன் ஹசார்ட்டை ரூ. 786 கோடிக்கு ரியல் மேட்ரிட் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ரியல் மேட்ரிட் அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
செல்சீ அணிக்காக ஆடிய ஈடன் ஹசார்ட், யூரோ லீக், பிரீமியர் லீக் தொடர்களை வெல்ல காரணமாக இருந்தவர் . அதேபோல் உலகக்கோப்பை தொடரில் பெல்ஜியம் அணிக்காக ஆடிய ஈடன் ஹசார்ட், இரண்டாவது சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
-
🇧🇪✨ @hazardeden10 is bringing the SKILLS!#WelcomeHazard | #HalaMadrid pic.twitter.com/rM2R1LO4VL
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) June 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🇧🇪✨ @hazardeden10 is bringing the SKILLS!#WelcomeHazard | #HalaMadrid pic.twitter.com/rM2R1LO4VL
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) June 7, 2019🇧🇪✨ @hazardeden10 is bringing the SKILLS!#WelcomeHazard | #HalaMadrid pic.twitter.com/rM2R1LO4VL
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) June 7, 2019
தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், சாதுர்யமாக கோல் அடிக்கும் திறனாலும் பெயர்பெற்ற ஈடன் ஹசார்ட் வருகையால் ரியல் மேட்ரிட் அணியின் பலம் அதிகரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ரியல் மேட்ரிட் அணி சார்பாக ஈடன் ஹசார்ட் அறிமுகப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.