இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் எத்திராஜ் இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 86. 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர் எத்திராஜ். இவரது மறைவுக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல், " எத்திராஜ் மறைவு செய்தி வேதனையளிக்கிறது. ஆரம்பகால இந்திய அணியில் முக்கியமான வீரராக திகழ்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் குஷல் தாஸ் கூறுகையில், "எத்திராஜ் ஒரு சிறந்த கால்பந்து வீரர். ஃபார்வர்டில் மிக சிறப்பாக விளையாடும் திறமைபெற்றவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்றார்.