இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சாட்டர்ஜி (78). கடந்த 1965இல் மெர்டேகா கோப்பை தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமானார். இந்திய அணிக்காக, 30 போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்துள்ளார்.
கடந்த 1965, 1966ஆம் ஆண்டுகளில் மெர்டேகா கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் அசோக் சாட்டர்ஜி இடம்பிடித்திருந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், மோகன் பாகன் அணிக்காக 1961 முதல் 1968 வரையும், பின் 1972ஆம் ஆண்டிலும் விளையாடி 85 கோல்களை அடித்துள்ளார்.
அதேபோல், ஈஸ்ட் பெங்கால் அணிக்காக 1969 முதல் 1971 வரை 39 கோல்களை அடித்துள்ளார். வயது முதுமை காரணமாக, இன்று உயிரிழந்தார். இவருக்கு சந்தீப் என்ற மகனும், ஒரு மனைவியும் உள்ளனர். அசோக் சாட்டர்ஜியின் மறைவுக்கு அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபிபா தாத்தா மறைவு: 1982 - 2018 வரை உலகக்கோப்பை கால்பந்து தொடருக்குப் பயணித்த ரசிகரின் பயணம்!