இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் நார்மன் ஹன்டர். இவர் 1966 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை வென்ற இங்கிலாந்து அணிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் இவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடியிருந்தாலும் இங்லிஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஜாம்பவானாகத் திகழ்ந்தார்.
1962இல் தன் 18ஆம் வயதில் லீட்ஸ் யுனைடெட் அணியில் முதலில் அறிமுகமானார். 14 ஆண்டுகள் அந்த அணிக்காக மட்டும் மொத்தம் 726 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம், லீட்ஸ் யுனைடெட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக லீட்ஸ் யுனைடெட் அணி தெரிவித்துள்ளது. இதனையடுத்து கால்பந்து வீரர்கள் பலரும் நார்மன் ஹண்டருக்கு சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு கால்பந்தாட்ட வீரர்கள்!