ஆல் கேரளா செவன்ஸ் கால்பந்து சங்கம் சார்பாக கேரள மாநிலம் கொச்சியில் செவன்ஸ் கால்பந்துத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் பெரிந்தல்மன்னா அணிக்கு எதிராக திருச்சூர் அணி விளையாடியது. செவன்ஸ் போட்டி என்பதால் முதல் பாதி 30 நிமிடங்களுக்கும், இரண்டாம் பாதி 30 நிமிடங்களுக்கும் நடைபெறும்.
இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய ஆட்டம் விறுவிறுப்பாக சென்றபோது, திடீரென பெரிந்தல்மன்னா அணி வீரர் தனராஜன் கையை உயர்த்தியவாறு சரிந்து விழுந்தார். இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு தனராஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அப்போது இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தனராஜன் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். கால்பந்து போட்டியின் போது மைதானத்திலேயே கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
The Mohun Bagan family deeply condole the sudden and sad demise of former Mohun Bagan Footballer Radhakrishnan Dhanarajan. May his holy soul rest in peace. pic.twitter.com/SSxKAMPa7u
— Mohun Bagan (@Mohun_Bagan) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Mohun Bagan family deeply condole the sudden and sad demise of former Mohun Bagan Footballer Radhakrishnan Dhanarajan. May his holy soul rest in peace. pic.twitter.com/SSxKAMPa7u
— Mohun Bagan (@Mohun_Bagan) December 29, 2019The Mohun Bagan family deeply condole the sudden and sad demise of former Mohun Bagan Footballer Radhakrishnan Dhanarajan. May his holy soul rest in peace. pic.twitter.com/SSxKAMPa7u
— Mohun Bagan (@Mohun_Bagan) December 29, 2019
கால்பந்து வீரர் தனராஜனுக்கு 39 வயதாகிறது. இவர் இந்தியாவின் பிரபல கால்பந்து கிளப் அணியான மோகன் பகானுக்கும், சந்தோஷ் டிராபியில் பெங்கால் அணிக்காகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவரது உயிரிழப்பிற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய ரசிகர்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்த ஜெர்மன் கால்பந்து கிளப்!