ETV Bharat / sports

கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவிலிருந்து மாற்றம்! - பிபா உலககோப்பை தொடர்

கடும் எதிர்ப்பு காரணமாக சீனாவில் நடக்கவிருந்த பிபா கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள், வேறு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) அறிவித்துள்ளது.

AFC , ஆசிய கால்பந்து கூட்டமைப்பு
Group A matches of Asian qualifiers moved from China to neutral venue
author img

By

Published : Jun 1, 2021, 12:29 PM IST

கோலாலம்பூர் (மலேசியா): வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலககோப்பை தொடருக்கான ஆசிய நாடுகளின் குரூப் 'ஏ' தகுதிச்சுற்று போட்டிகள், வரும் 2023ஆம் ஆண்டில் நடைபெறும் ஏஎஃப்சி ஆசிய கோப்பை ஆகிய தொடர்கள் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அத்தொடர்கள் சீனாவுக்கு பதிலாக வேறு நாட்டில் நடத்தப்படும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) இன்று (மே.31) அறவித்துள்ளது.

இந்தத் தொடர்களில் பங்கேற்கும் பல அணிகள் சீனாவில் போட்டியை நடத்த கடும் அதிருப்தி தெரிவித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய தகுதிசுற்றுப் போட்டிகளை சுமுகமாக நடத்திட, சீனா மற்றும் பொதுவான நாடுகளைக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்த ஏஎஃப்சி பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

எப்போது தகுசிச்சுற்று

மேலும், ஆசிய நாடுகளுக்கான குரூப் 'ஏ' போட்டிகளை நடத்த வேறு பொதுவான நாட்டை தேர்ந்தெடுத்த பின் தான் போட்டிகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும். இருப்பினும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இப்போட்டிகளை வரும் ஜீன் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று ஏஎஃப்சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது குரூப் 'ஏ' தகுதிச்சுற்றில் சிரியா 15 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனா 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது செல்சீ!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.