ஹய்தி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் யீவ்ஸ் ஜீன் பார்ட். இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஹய்தி கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறார். பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஜீன் பார்ட் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏப்ரம் மாதம் தேசிய கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற வீராங்கனை ஒருவர், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதில், ''கடந்த 5 வருடங்களாக பல இளம் வீராங்கனைகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரால் இரு வீராங்கனைகள் கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என எங்கள் அனைவரையும் மிரட்டினார்'' என்றார்.
இந்த விவகாரம் பெரிதாக சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மூன்று மாதங்களுக்கு ஜீன் பார்ட் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஃபிஃபா விதிமுறைகளான ஆர்டிகிள் 84, 85ன் படி அறிநெறிக் குழுவினரால் ஹய்தி கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜீம் பார்ட் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் கால்பந்து தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
அவர் மீதான விசாரணை நடப்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கும் வருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு ஐயம்: கைதுசெய்யப்பட்ட செல்சி வீரர் பிணையில் விடுவிப்பு!