ETV Bharat / sports

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்த ஃபிஃபா! - பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு

கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று பி.எஃப்.எஃப் அலுவலகம் தாக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்களை பி.எஃப்.எஃப் முன்னாள் தலைவர் சையத் அஷ்பக் உசேன் ஷாவும், அவரது குழுவினரும் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். அதனால் தற்போது ஃபிஃபா இடைநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Pakistan Football Federation ,FIFA
FIFA bans Pakistan Football Federation
author img

By

Published : Apr 8, 2021, 1:10 AM IST

லோசான் (சுவிட்சர்லாந்து): கால்பந்து வாரியங்களில் மூன்றாம் தரப்பின் தலையீடு காரணமாக பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பையும் (பி.எஃப்.எஃப்), சாடியன் அரசாங்கத்தின் தலையீட்டின் காரணத்தால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (எஃப்.டி.எஃப்.ஏ) இடைநீக்கம் செய்வதாக உலக கால்பாந்து கூட்டமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது.

ஃபிஃபா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "லாகூரில் உள்ள பி.எஃப்.எஃப் தலைமையகத்தை அண்மையில் சட்டவிரோதமாக ஒரு குழுவினர் கையகப்படுத்தி, ஃபிஃபா நியமித்த ஹாரூன் மாலிக் தலைமையிலான குழுவை நீக்கிவிட்டு, சையத் அஷ்பக் உசேன் ஷாவிடம் பி.எஃப்.எஃப் தலைமையை ஒப்படைக்க வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று பி.எஃப்.எஃப் அலுவலகம் தாக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்களை பி.எஃப்.எஃப் முன்னாள் தலைவர் சையத் அஷ்பக் உசேன் ஷாவும், அவரது குழுவினரும் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். ஆதலால் தான் தற்போது ஃபிஃபா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பி.எஃப்.எஃப்க்குச் சொந்தமான வளாகங்கள், கணக்குகள், நிர்வாகம், தகவல் தொடர்பு என அனைத்தும் மீண்டும் ஹாரூன் மாலிக்கின் முழு கட்டுப்பாட்டின்கீழ் வந்துபின்னரும், வேறு சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்னரே பி.எஃப்.எஃப்பின் இடைநீக்க நடவடிக்கை விலக்கிக்கொள்ளப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

மற்றொரு கால்பந்து சங்கமான எஃப்.டி.எஃப்.ஏ-க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நிரந்தரமாக திரும்பப் பெறுவதற்கும், கால்பந்தின் தற்காலிக நிர்வாகத்திற்காக ஒரு தேசிய குழுவை அமைப்பதற்கும், எஃப்.டி.எஃப்.ஏ வளாகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும் சாடியன் அரசு அலுவலர்களின் சமீபத்திய செயல்பாடுகளால் அதிருப்தியான ஃபிஃபா, சாடியன் கால்பந்து சங்கத்தை இடைநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2021 : மீண்டெழுமா தோனியின் அதிரடிப்படை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.