கால்பந்தில் தலைசிறந்த கிளப் அணியாக ஸ்பெயினின் பார்சிலோனா அணி திகழ்கிறது. அந்த அணிக்குச் சொந்தமாக கேட்டலோனியாவில் கேம்ப் நௌ மைதானம் உள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய மைதானமான கேம்ப் நௌ 99,000 இருக்கைகள் கொண்டுள்ளது. 1957இல் கட்டப்பட்ட இம்மைதானத்துக்கு டைட்டில் ஸ்பான்சர் இருந்ததில்லை.
இதற்கிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 420 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக, ஸ்பெயினில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக நிதி திரட்டும் வகையில் பார்சிலோனா அணி தனது சொந்த மைதானமான கேம்ப் நெள பெயரின் உரிமத்தை ஒரு ஆண்டிற்கு விற்க முடிவுசெய்துள்ளது. அதன்படி, ஒரு ஆண்டிற்கு கேம்ப் நெள என்ற பெயருக்குப் பதிலாகத் தங்களது நிறுவனங்களின் பெயரை ஸ்பான்சர்கள் சூட்டிக்கொள்ளலாம்.
இதன்மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் பார்சிலோனாவுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரொனால்டோவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி' - வேய்ன் ரூனி!