ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிச் சுற்றின் இரு போட்டிகள் இன்று (ஜூலை 2) நடைபெறுகின்றன.
இன்றைய இரு போட்டிகள்
இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஸ்பெயின் அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. 2008, 2012 யூரோ தொடரின் சம்பியனான ஸ்பெயின் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சுவிட்சர்லாந்து அணி இதற்கு முந்தைய போட்டியில் பலம்வாய்ந்த ஃபிரான்ஸ் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியில் களம் காண்கிறது.
இன்றைய இரண்டாவது போட்டியில், இத்தாலி அணி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே பலம்வாய்ந்த அணிகள் என்பதால் இப்போட்டி ரசிகர்ளுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
𝗗𝗔𝗬 𝟮𝟮 😍
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇨🇭🇪🇸🇧🇪🇮🇹
🔮 Two teams will book their semi-final spots today! Predict who will progress 👇#EURO2020 pic.twitter.com/ebdxngbncI
">𝗗𝗔𝗬 𝟮𝟮 😍
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
🇨🇭🇪🇸🇧🇪🇮🇹
🔮 Two teams will book their semi-final spots today! Predict who will progress 👇#EURO2020 pic.twitter.com/ebdxngbncI𝗗𝗔𝗬 𝟮𝟮 😍
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
🇨🇭🇪🇸🇧🇪🇮🇹
🔮 Two teams will book their semi-final spots today! Predict who will progress 👇#EURO2020 pic.twitter.com/ebdxngbncI
காலிறுதிக்கு முந்தையத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற முன்னணி அணிகள் தோல்வியடைந்தன. அதுபோன்ற அதிர்ச்சி காலிறுதியிலும் நடைபெறுமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: டெல்டா வகை வைரஸிலிருந்தும் பாதுகாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள்!