ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) போட்டித் தொடர், தற்போது நடைபெற்றுவருகிறது. குரூப் பி பிரிவில் நேற்று (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் அணி ரஷ்ய அணியை எதிர்கொண்டது.
ஆஸ்திரியா, டென்மார்க் வெற்றி
தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய டென்மார்க் அணி 38ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அடுத்த கியருக்கு உயர்த்திய டென்மார்க் அணி அதிரடியாக மூன்று கோல்கள் அடித்தது. ரஷ்ய அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இறுதியில் 4-1 என்ற கணக்கில் டென்மார்க் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
குரூப்-சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
-
🇩🇰 Scenes in Copenhagen! 🥳#EURO2020 pic.twitter.com/q6liYdr9K9
— UEFA EURO 2020 (@EURO2020) June 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🇩🇰 Scenes in Copenhagen! 🥳#EURO2020 pic.twitter.com/q6liYdr9K9
— UEFA EURO 2020 (@EURO2020) June 21, 2021🇩🇰 Scenes in Copenhagen! 🥳#EURO2020 pic.twitter.com/q6liYdr9K9
— UEFA EURO 2020 (@EURO2020) June 21, 2021
இன்றைய ஆட்டங்கள்
இன்று(ஜுன் 22) நடைபெறும் முதல் போட்டியில் குரேஷியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் செக் ரிபப்ளிக் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: "ரொனால்டோவை யூரோ தொடரிலிருந்து பிரித்தெடுக்க முடியாது": டெரி ஃபெலனுடன் பிரத்யேக நேர்காணல்