இங்கிலாந்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் லிவர்பூல் கிளப் அணி, இதுவரை விளையாடிய 26 போட்டிகளில் 25 வெற்றி, ஒரு டிரா என தோல்வியையே சந்திக்காமல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவந்தது.
இதனிடையே புள்ளிப்பட்டியலில் 17ஆவது இடத்திலிருக்கும் வாட்போர்ட் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் லிவர்பூல் அணி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள லிவர்பூல் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய சோகத்தை பதிவு செய்தனர்.
இன்னும் 9 போட்டிகளில் லிவர்பூல் அணி தொடர்ச்சியாக வெற்றிபெற்றால், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சாதனையை முறியடித்திருக்கும். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததால், அந்த சாதனை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வசமே உள்ளது.
- — Liverpool FC (@LFC) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Liverpool FC (@LFC) March 1, 2020
">— Liverpool FC (@LFC) March 1, 2020
இதன்மூலம் 28 போட்டியில் பங்கேற்றுள்ள லிவர்பூல் அணி, 26 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி என 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருந்தாலும், லிவர்பூல் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதும் இதோட நிறுத்திக்கோங்க... லிவர்பூல் அணிக்கு 10 வயது கால்பந்து ரசிகர் எழுதிய கடிதம்