கரோனா வைரஸுக்கு மத்தியிலும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்திலிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் ஷெஃபீல்ட் யுனைடெட் அணியும் மோதின.
போட்டி தொடங்கியதுமே ஷெஃபீல்ட் யுனைடெட் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கீன் பிரையன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவிலேயே ஷெஃபீல்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனை சரிகட்டும் முடிவில் இரண்டாம் பாதி ஆட்டத்தைத் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஹாரி மக்வாயர் 64ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
-
A big 3 points. 🙌
— Sheffield United (@SheffieldUnited) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
All the highlights from our 2-1 win over Man United. pic.twitter.com/spWvWZHpWC
">A big 3 points. 🙌
— Sheffield United (@SheffieldUnited) January 28, 2021
All the highlights from our 2-1 win over Man United. pic.twitter.com/spWvWZHpWCA big 3 points. 🙌
— Sheffield United (@SheffieldUnited) January 28, 2021
All the highlights from our 2-1 win over Man United. pic.twitter.com/spWvWZHpWC
இருப்பினும் தனது திறமையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ஷேஃபீல்ட் யுனைடெட் அணிக்கு ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் ஆலிவர் பர்க் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதனால் ஆட்டநேர முடிவில் ஷெஃபீல்ட் யுனைட்டெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய பரோடா, ராஜஸ்தான் அணிகள்!