ETV Bharat / sports

பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம் - மார்டின் பீட்டர்ஸ்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரரான மார்டின் பீட்டர்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக தனது 76ஆவது வயதில் நேற்று காலமானார்.

martin peters, இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் மார்டின் பீட்டர்ஸ்
martin peters
author img

By

Published : Dec 22, 2019, 9:35 AM IST

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த மிட்-பீல்டர்களில் ஒருவர் மார்டின் பீட்டர்ஸ். 1966ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இவர், அந்தத் தொடரில் ஜெர்மன் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது கோலை அடித்தார். இவர் இங்கிலாந்து அணிக்காக 67 போட்டிகளில் களமிறங்கி 20 கோல்களை அடித்துள்ளார்.

1959ஆம் ஆண்டு வெஸ்ட் ஹாம் அகாதமியில் தற்காலிக வீரராக மார்டின் பீட்டர்ஸை ஒப்பந்தம் செய்தனர். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர், யூரோ கோப்பை தொடரில் ஈஸ்ட் லண்டன் கிளப் அணி வெற்றி பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.

martin peters, இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் மார்டின் பீட்டர்ஸ்
மார்டின் பீட்டர்ஸ்

தலைசிறந்த மிட் பீல்டராக விளங்கிய மார்டினை 'தி கோஸ்ட்' என்றே அழைப்பார்கள். பின்பு 1970இல் டோட்டன்ஹாம் கிளப் அணியில் இணைந்தார். அந்த அணியிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், 1972இல் யுஈஎஃப்ஏ கால்பந்து தொடரை டோட்டன்ஹாம் அணி வெல்ல காரணமாக இருந்தார். கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்ட இவர், பின்னாளில் டோட்டன்ஹாம் அணியின் நிர்வாகத்தில் தனது பங்களிப்பை அளித்தார்.

இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அல்ஜைமர் நோயால் பாதிக்கப்பட்ட மார்டின் பீட்டர்ஸ் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இதனிடையே சனிக்கிழமையன்று இவர் தனது வீட்டில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஆலன் பால், ரே வில்சன், கார்டன் பேங்க்ஸ், மூர் ஆகியோரின் மறைவுக்குப்பின் மார்டின் பீட்டர்ஸ் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு இங்கிலாந்து கால்பந்து அணி, வெஸ்ட் ஹாம், டோட்டன்ஹாம் உள்ளிட்ட அணிகளின் சார்பாகவும், பல்வேறு கால்பந்தாட்ட வீரர்கள் சார்பாகவும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜோ ரூட்டிற்கு நெருக்கடி தருவோம் - ஜாக் காலிஸ் திட்டவட்டம்!

Intro:Body:

Martin Peters: 1966 World Cup winner and West Ham legend dies aged 76

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.