ETV Bharat / sports

'தண்ணியைக் குடி' - ரொனால்டோவின் மாஸ் பதிலால் சரிவைச் சந்தித்த கோகோ கோலா - மாஸ் காட்டிய ரொனால்டோ - சரிவை சந்தித்த கோகோ கோலா

முக்கிய செய்தியாளர் சந்திப்பில் 'தண்ணீரைக் குடியுங்கள்' எனக்கூறி, கோகோ கோலாவை ஒதுக்கி வைத்து, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ கருத்து தெரிவித்த சம்பவம் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.

மாஸ் காட்டிய ரொனால்டோ - சரிவை சந்தித்த கோகோ கோலா

author img

By

Published : Jun 16, 2021, 12:54 PM IST

யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. யூரோ கால்பந்து 2020 போட்டிகளுக்கான, முக்கிய ஸ்பான்ஷராக கோகோ கோலா நிறுவனம் பன்னெடுங்காலமாக உள்ளது.

இதில் போர்ச்சுக்கல் அணியோடு ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகள் மோதும் வகையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று போர்ச்சுக்கல் - ஹங்கேரி அணிகள் மோதின.

அதற்கு முன்பு காலையில் புடபெஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோ பங்கெடுத்தார்.

அப்போது இரண்டு கோகோ கோலா பாட்டில்களை ரொனால்டோ பொதுவெளியில் ஒதுக்கிவைத்தார். பின் 'தண்ணீரைக் குடியுங்கள்' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தின் விற்பனை 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் இந்திய மதிப்பு 29ஆயிரத்து 354 கோடி ரூபாய் ஆகும். இதனால் கோகோ கோலாவின் பங்கு திடீரென 1.6% வீழ்ச்சியடைந்துள்ளது.

இதையும் படிங்க: யூரோ 2020: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது செக் குடியரசு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.