ETV Bharat / sports

பிரீமியர் லீக் கிளப் அணி வீரர்கள் உள்பட 6 பேருக்கு கரோனா! - தமிழ் விளையாட்டு செய்திகள்

இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் மூன்று கிளப் அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

COVID-19: Premier League reveals six positive tests across three clubs

author img

By

Published : May 20, 2020, 4:27 PM IST

கரோனா பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, சில போட்டிகள் மட்டும் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கால்பந்து தொடரான இங்கிலீஸ் பிரீமியர் லீக்கும், பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் கிளப் அணிகளின் வீரர்கள், ஊழியர்கள் என சுமார் 748 பேருக்கு கரோனா பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனை முடிவில் மூன்று கிளப் அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களை ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தியுள்ளதாக பிரீமியர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு ஐயம்: கைதுசெய்யப்பட்ட செல்சி வீரர் பிணையில் விடுவிப்பு
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.