கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் பல நாடுகள் திண்டாடிவருகின்றன. வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் வழங்குவதே அந்தந்த நாடுகளுக்கு கடினமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தேவருகிறது.
இந்நிலையில் பார்சிலோனாவில் உள்ள கிளினிக் மருத்துவமனைக்கு ஒரு மில்லியன் யூரோ வழங்கி பார்சிலோனா கால்பந்து வீரர் மெஸ்ஸி நிதியுதவி வழங்கியுள்ளார். இவரைத்தொடர்ந்து மெஸ்ஸியின் மேலாளரான பெப் கார்டியாலோவும் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளார்.
முன்னதாக லிஸ்பான், போர்ட்டோ ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்காக யுவெண்டஸ் அணியின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு மில்லியன் யூரோ வழங்கியிருந்தார்.
இதுவரை கரோனா வைரசால் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19: பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஃபிஃபா!