ETV Bharat / sports

கரோனா எதிரொலி: ஆர்ஜெண்டினா சூப்பர் லீக் கால்பந்து தொடர் ரத்து! - அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு

கரோனா வைரஸின் எதிரொலியாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த அர்ஜெண்டினா சூப்பர் லீக் கால்பந்து தொடர் முழுவதுவாமக ரத்து செய்யப்படுவதாக அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

COVID-19: Argentina aborts football season, suspends relegation

author img

By

Published : Apr 28, 2020, 7:37 PM IST

உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு இதுவரை உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அர்ஜெண்டினாவில் ஜூலை மாதம் தொடங்க இருந்த அர்ஜெண்டினா சூப்பர் லீக் கால்பந்து தொடர், தற்போது கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் ரத்து செய்யப்படுவதாக, அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவர் கிளாடியோ டாபியா (Claudio Tapia) கூறுகையில், 'ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த அர்ஜெண்டினா சூப்பர் லீக் கால்பந்து தொடர் தற்போது ரத்து செய்யப்படுகிறது. மேலும் இப்போட்டியை அதிக பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் நலனை கருத்தில்கொண்டு தொடரை தற்போது ரத்து செய்துள்ளோம்' என்று தெரிவித்துளார்.

இதையும் படிங்க:பிறந்தநாள் அன்றும் நிக் கிர்ஜியோஸை ப்ராங்க் செய்த சிட்சிபாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.