கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. அர்ஜெண்டினா மற்றும் சிலி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி - சிலி அணியின் கேரிக்கு இடையே மோதல் உண்டானது.
அப்போது, மைதானத்தின் நடுவே இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர். இதனால் இருவருக்கும் ’ரெட் கார்டு’ கொடுத்து போட்டியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
கால்பந்து ஆட்டத்தின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, 14 வருடங்களுக்கு பிறகு ரெட் கார்டு முறையில் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த போட்டியின் இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.