கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்ஸிகோவில் வட, மத்திய அமெரிக்கா & கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெறவிருந்த ஆடவருக்கான கால்பந்து ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிபிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இந்தாண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆடவர் கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் இந்தாண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதிவரை நடத்தவுள்ளதாக அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
Two tickets on the line to @Tokyo2020! 👇 pic.twitter.com/zlnZlpMRt6
— Concacaf (@Concacaf) January 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Two tickets on the line to @Tokyo2020! 👇 pic.twitter.com/zlnZlpMRt6
— Concacaf (@Concacaf) January 14, 2021Two tickets on the line to @Tokyo2020! 👇 pic.twitter.com/zlnZlpMRt6
— Concacaf (@Concacaf) January 14, 2021
மேலும் எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இதில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெறும். இப்போட்டிகள் அனைத்தும் மெக்ஸிகோவிலுள்ள ஜாலிஸ்கோ, அக்ரான் மைதானங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
குரூப் ஏ: யூ. எஸ், மெக்சிகோ, கோஸ்டாரிகா, டொமினிக் குடியரசு.
குரூப் பி: ஹோண்டுராஸ், கனடா, எல் சால்வடார், ஹைட்டி.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் : வெற்றி பாதையை தக்கவைப்பது யார்? கேரளா பிளாஸ்டர்ஸ் vs ஈஸ்ட் பெங்கால்!