ETV Bharat / sports

வெற்றிப் பாதைக்குத் திரும்புமா சென்னை எஃப்.சி. அணி? - சென்னை எஃப்சி அணி

பாம்போலிம்: ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் பெங்களூரு எஃப்.சி. அணியும், சென்னை எஃப்.சி. அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

வெற்றிக்கு பாதைக்கு திரும்புமா சென்னை எஃப்சி அணி?

author img

By

Published : Dec 4, 2020, 9:49 AM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்துப் போட்டியின் 7ஆவது சீசன் கோவாவில் நடைபெற்றுவருகிறது. இதில், 11 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான சென்னையின் எஃப்.சி. அணியும், நடப்புச் சாம்பியனான பெங்களூரு எஃப்.சி. அணியும் மோதுகின்றன.

சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தத் தொடரின் தனது முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது. இரண்டு போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்ட சென்னை அணி கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது.

வெற்றிபெற வேண்டிய அந்த ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை சென்னை அணி வீணடித்தது. பெங்களூரு அணி தனது இரண்டு லீக் ஆட்டங்களிலும் (கோவா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக) ‘டிரா’ செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஆட்டம் முடியும் நேரம்... கிருஷ்ணா அடித்த கோல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.