ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது செல்சீ! - ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் அணியை 0 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக செல்சீ அணி வென்று கோப்பையை முத்தமிட்டுள்ளது.

Chelsea, செல்சீ
Chelsea thump Manchester City 1-0 to win Champions League
author img

By

Published : May 30, 2021, 5:33 PM IST

போர்டோ (போர்ச்சுகல்): ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நேற்று (மே,30) நடந்த இறுதிப் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி- செல்சீ அணிகள் மோதின.

இதற்கு முன் 2012ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில், பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) அணிக்கு எதிராக செல்சீ அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின்னர், இறுதிப்போட்டி பக்கமே தலை வைக்காத செல்சீ, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவே மான்செஸ்டர் சிட்டி அணிக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் இறுதிப் போட்டியாகும். நேற்று நடந்த இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணியே தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்போட்டியின் முழு நேரத்தில் 61 சதவிகித நேரம், பந்து மான்சஸ்டர் அணியிடமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போட்டி நேர முடிவில் மான்செஸ்டர் ஒரே ஒரு கோல் கிக் முயற்சியை தான் எடுத்தது.

செல்சீ அணி வீரர் கெய் ஹவேர்ட் ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் அடித்த கோல்தான், மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்களின் நம்பிக்கையைச் சிதறடித்தது. இதனையடுத்து, மான்செஸ்டர் சிட்டியின் அத்தனை முயற்சிகளையும் செல்சீ அணி தகர்த்து வந்ததால், செல்சீ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தொடரை வென்றது.

பிரிமியர் லீக், கரோபோ கோப்பை என இரண்டையும் வென்று கடந்த ஆண்டு மாஸ் காட்டிய செல்சீ அணி, பெப் கார்டியாலோவின் தலைமையில் யுஇஎப்ஏ சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு - பிசிசிஐ அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.