இங்லீஷ் பிரிமியர் லீக் (ENGLISH PREMIER LEAGUE) கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் செல்சி அணியும், லெய்செஸ்டர் சிட்டி அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியின் ஆறாவது நிமிடத்திலேயே செல்சி அணி வீரர் மேசன் மவுண்ட் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதியில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 66ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டர் சிட்டியின் வில்பிரட் டிடி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.