ETV Bharat / sports

லா லிகா: ஈபார் எஃப்சியை வீழ்த்தியது காடிஸ் எஃப்சி! - காடிஸ் எஃப்சி

லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் காடிஸ் எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் ஈபார் எஃப்சி அணியை வீழ்த்தியது.

Cdiz win at Eibar 2-0 to build on great return to Liga

author img

By

Published : Oct 31, 2020, 4:56 PM IST

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று (அக்.31) நடைபெற்ற லீக் போட்டியில் காடிஸ் எஃப்சி அணி - ஈபார் எஃப்சி அணியுடன் மோதியது.

பரபரப்பான இந்த அட்டத்தின் தொடக்க முதலே காடிஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன் விளைவாக அந்த அணியின் அல்வாரோ நெக்ரெடோ ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் கோலடிக்க, அவரைத் தொடர்ந்து சால்வடார் சான்செஸ் போன்ஸ் ஆட்டத்தில் 39ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் காடிஸ் அணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் காடிஸ் அணியின் டிஃபென்ஸை எதிர்த்து ஈபார் அணியால் கோலடிக்க முடியவில்லை.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் காடிஸ் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈபார் எஃப்சி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காடிஸ் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: குத்துச்சண்டை: அமித் பங்கல், சந்தீத் தங்கம் வென்று சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.