ETV Bharat / sports

சீரி ஏ புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜுவெண்டஸ்! - ஜுவென்டஸ்

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரின் நேற்றைய (ஜூலை 4) லீக் ஆட்டத்தில் ஜுவெண்டஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் டொரினோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

buffon-makes-history-as-ronaldo-leads-juve-to-4-1-over-torino

author img

By

Published : Jul 5, 2020, 7:13 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், பார்வையாளர்களின்றி கால்பந்து தொடர்களை நடத்த பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு வந்தன. அந்த வகையில், ஜெர்மனியில் பண்டஸ்லிகா கால்பந்து தொடர் தொடங்கப்பட்டதை அடுத்து லா லிகா, பிரீமியர் லீக் ஆகிய தொடர்களும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்தொடரில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற லீக் போட்டியில் ஜுவெண்டஸ் அணி, டொரினோ அணியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவெண்டஸ் வீரர்கள் டைபாலா ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலும், குவர்டாடோ(cuadrado) ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் டொரினோ அணியின் பெலோட்டி 45ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜுவெண்டஸ் அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

buffon-makes-history-as-ronaldo-leads-juve-to-4-1-over-torino

அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜுவெண்டஸ் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 61ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதி வரை போராடிய டொரினோ அணியால் எதிரணியின் டிபென்ஸை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஜுவெண்டஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் டொரினோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜுவெண்டஸ் அணி சீரி ஏ கால்பந்து தொடரின் புள்ளிப் பட்டியலில் 75 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.