ஐரோப்பா சர்வதேச கால்பந்து அணிகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை யூரோ கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. 2016 ஃபிரான்சில் நடைபெற்ற இந்தத் தொடரில் கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் அடுத்த ஆண்டு யூரோ கால்பந்து தொடர் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
தற்போது இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் ஐ பிரிவுக்கான போட்டியில் உலகின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, சான் மரினோ அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 3-4-3 ஃபார்மெஷனில் விளையாடிய பெல்ஜியம் அணி, பந்தை அதிகம் பாஸ் செய்தே விளையாடியது. முதலில் கோலடிக்க தடுமாறிய பெல்ஜியம் அணிக்கு அந்த அணி வீரர் ரொமெலு லுகாகு 28ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத் தந்தார்.
அதன்பிறகு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல்ஜியம் அணி முதல் பாதி முடிவில் ஆறு கோல்களை அடித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் பாதி முடிய 12 நிமிடங்கள் இருந்த நிலையில், மீண்டும் பெல்ஜியம் அணி மூன்று கோல்களை அடித்து இறுதியில், பெல்ஜியம் அணி இப்போட்டியில் 9-0 என்ற கோல் கணக்கில் சான் மரினோவை வீழ்த்தியது.
-
Proud to be a part of this amazing team. #Euro2020 qualification complete. Congrats @RomeluLukaku9 on your 50th @BelRedDevils goal! pic.twitter.com/qZeZl39WJr
— Christian Benteke (@chrisbenteke) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Proud to be a part of this amazing team. #Euro2020 qualification complete. Congrats @RomeluLukaku9 on your 50th @BelRedDevils goal! pic.twitter.com/qZeZl39WJr
— Christian Benteke (@chrisbenteke) October 11, 2019Proud to be a part of this amazing team. #Euro2020 qualification complete. Congrats @RomeluLukaku9 on your 50th @BelRedDevils goal! pic.twitter.com/qZeZl39WJr
— Christian Benteke (@chrisbenteke) October 11, 2019
இதன்மூலம், பெல்ஜியம் அணி குரூப் பிரிவில் விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறும் யூரோ கால்பந்துத் தொடரில் பங்கேற்கும் முதல் அணி என்ற பெருமையை பெல்ஜியம் பெற்றுள்ளது. பெல்ஜியம் அணி சார்பாக ரொமெலு லுகாகு இப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார்.