ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி, அத்லெடிகோ மாட்ரிட் அணியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெயர்ன் முனிச் அணியின் கிங்ஸ்லி கோமன், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் லியோன் கோலடித்து அசத்த, முதல்பாதி ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய கிங்ஸ்லி கோமன், ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அசத்தினார். ஆனால் இறுதி வரை போராடிய அத்லெடிகோ அணியால் எதிரணியின் டிபென்ஸை சமாளித்து கோலடிக்க இயலவில்லை.
இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் பெயர்ன் முனிச் அணி, 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் 20-21: குத்துச்சண்டை பயிற்சியில் ஜேஜே!