ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (அக். 29) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, ஜுவென்டஸ் அணியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பார்சிலோனா அணி ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலடிக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரத்தை சரியாக பயன்படுத்திய மெஸ்ஸி கோலடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
-
FT | ⏱ | Full-time at the Allianz. #JuveBarça #JuveUCL #ForzaJuve pic.twitter.com/PwDkdGqImj
— JuventusFC (@juventusfcen) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT | ⏱ | Full-time at the Allianz. #JuveBarça #JuveUCL #ForzaJuve pic.twitter.com/PwDkdGqImj
— JuventusFC (@juventusfcen) October 28, 2020FT | ⏱ | Full-time at the Allianz. #JuveBarça #JuveUCL #ForzaJuve pic.twitter.com/PwDkdGqImj
— JuventusFC (@juventusfcen) October 28, 2020
இதன் மூலம் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக கடந்த அக். 13ஆம் தேதி ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அணியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாதனை படைத்த லிவர்பூல்!