ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: முதன்முறையாக வெற்றி வாகை சூடிய பெங்களூரு!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: முதன்முறை வெற்றி வாகை சூடிய பெங்களூர் அணி!
author img

By

Published : Mar 18, 2019, 9:38 AM IST

ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப்போட்டிநேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு -கோவா அணிகள் மோதின.

தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு தீவிர முயற்சி செய்தன, இருப்பினும் 90 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக தரப்பட்டது.

பின்னர் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் பந்துகளை எதிர்கொண்டனர். 116ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி கோலடித்து பிரமிக்கவைத்தார்.

ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

வெற்றிவாகை சூடிய பெங்களூரு அணிக்கு எட்டு கோடி ரூபாயும் இரண்டாவது இடம் பிடித்த கோவா அணிக்கு நான்குகோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் 16 கோல்களை அடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த பெர்ரான் கோரோமினாசுக்கு தங்கக் காலணி மற்றும் தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது. பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.