2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் எத்தனை அணிகள் பங்கேற்கவுள்ளன என்பது குறித்து பிஃபா எவ்வித தகவலும் வெளியிடாமல் உள்ளது. அதேபோல் அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32இல் இருந்து 48ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் மட்டும் நடத்தாமல் ஓமனிலும் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என பிஃபா தலைவர் இன்ஃபாண்டினோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிஃபா அட்டவணையில் ஆசிய தேசிய அணிகளிலேயே கீழ்வரிசையில் இருக்கும் 12 அணிகளுக்கான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில் பூடான், கம்போடியா, மலேசியா, வங்கதேசம், இலங்கை, மங்கோலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு அணிகள் விளையாடுகின்றன.
இதில் வெற்றிபெறும் 6 அணிகள், ஆசிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுக்கு தகுதி சுற்றுப் போட்டிகளுக்கு தகுதிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.