இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஒரு காலத்தில் சாம்பியன் அணியாக திகழ்ந்த ஆர்செனல் அணி தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 1996 முதல் 22 ஆண்டுகளாக ஆர்செனல் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆர்சென் வெங்கரின் பதவிக்காலம் 2018 மே மாதத்தில் முடிந்தவுடன், அந்த அணியின் பயிற்சியாளராக உனாய் எமிரி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரால் ஆர்சென் வெங்கரைப் போல ஆர்செனல் அணியை கட்டமைக்க முடியவில்லை.
குறிப்பாக, ஆர்செனல் அணி நடப்பு இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (இ.பி.எல்.) சீசனில் விளையாடிய 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்தது. அதேசமயம், நடப்பு சீசன் யூரோப்பா போட்டியில் ஆர்செனல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் என்டிராச்ட் ஃபரங்ஃபர்ட் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், எமிரி ஆர்செனல் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் ஆர்செனல் விளையாடிய 78 போட்டிகளில் 43 வெற்றி, 16 டிரா, 19 தோல்வியை சந்தித்திருந்தது.
-
A famous victory for Brighton as they win at Arsenal for the first time#ARSBHA pic.twitter.com/upDs780NNq
— Premier League (@premierleague) December 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A famous victory for Brighton as they win at Arsenal for the first time#ARSBHA pic.twitter.com/upDs780NNq
— Premier League (@premierleague) December 5, 2019A famous victory for Brighton as they win at Arsenal for the first time#ARSBHA pic.twitter.com/upDs780NNq
— Premier League (@premierleague) December 5, 2019
அவருக்குப் பதிலாக ஃபிரெட்டி ஜூன்பெர்க் ஆர்செனல் அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியக்கப்பட்டார். இந்நிலையில், லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்செனல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியுடன் தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது.
1977க்கு பிறகு தற்போது ஆர்செனல் அணியால் தொடர்ந்து விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாமலிருப்பது இதுவே முதல்முறை. இந்தத் தோல்வியின் மூலம், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஆர்செனல் அணி 15 போட்டிகளில் நான்கு வெற்றி, ஏழு டிரா, நான்கு தோல்வி என 19 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றிக்காக தவிக்கும் ஆர்செனல் அணி மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அங்கே மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது; இங்கே ரொனால்டோவுக்கு சிறந்த வீரருக்கான விருது!