ETV Bharat / sports

கெத்து காட்டிய மெஸ்ஸி - கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா - கால் பந்து போட்டி

28 ஆண்டுகளுக்குப் பின் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.

argentina won the copa america 2021  argentina won the copa america final  argentina vs brazil  foot ball match  copa america final  அர்ஜென்டினா வெற்றி  இறுதிப்போடியை வென்ற அர்ஜென்டினா  கால் பந்து போட்டி  வெற்றி
வெற்றி
author img

By

Published : Jul 11, 2021, 11:28 AM IST

Updated : Jul 11, 2021, 11:45 AM IST

பிரேசில்: தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ரியோடி ஜெனிரோ மைதானத்தில் நேற்று (ஜூலை 10) நடந்தது. இதில் நடப்பு ஆண்டு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.

அர்ஜென்டினா லீக் சுற்றில் சிலி, உருகுவே, பாராகுவே, பொலிவியா நாடுகளை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் ஈக்வெடார் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.

argentina won the copa america 2021  argentina won the copa america final  argentina vs brazil  foot ball match  copa america final  அர்ஜென்டினா வெற்றி  இறுதிப்போடியை வென்ற அர்ஜென்டினா  கால் பந்து போட்டி  வெற்றி
பிரேசில் அர்ஜென்டினா மோதல்

அரையிறுதியில் கொலம்பியா அணியுடன் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா டை செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியா அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.

பிரேசில் அணி, லீக் சுற்றில் மூன்று வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து கால்இறுதியில் சிலியையும் (1-0), அரைஇறுதியில் பெருவையும் (1-0) தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கோப்பையை கைபற்றிய அர்ஜென்டினா

இறுதி ஆட்டம்

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டீ பால் தன்னிடம் இருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். அப்போது மரியா, பிரேசில் வீரர் எடர்ஸனை லாவகமாகத் தாண்டி பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார். இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.

அதன்பின் அர்ஜென்டினா அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டபோது, பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முயன்ற வாய்ப்புகளை தகர்த்தனர். இரண்டாவது பாதியிலும் பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், அர்ஜென்டினா வீரர்கள், அவர்களை தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர்.

கடைசி நேரத்தில் பிரேசில் அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது, அதை நெய்மர் கோலாக மாற்ற முயன்ற போது, பந்து கோல் போஸ்ட்டுக்கு மேல் பட்டுச் சென்றது. இதையடுத்து 88-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதை கோல் கீப்பர் தடுத்தார்.

அர்ஜென்டினா வெற்றி

ஆட்டத்தின் முடிவில், பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இவ்விரு அணிகளும் இதுவரை 111 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 46-ல் பிரேசிலும், 40-ல் அர்ஜென்டினாவும் வெற்றி பெற்றன. 25 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

வெற்றியை சுவைத்த மெஸ்ஸி

மேலும் இதற்கு முன், 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993 ஆகிய ஆண்டுகளில், கோபா அமெரி்க்கா சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பின் 15 ஆவது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.

2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்தில் 2007, 2015, 2016-ம் ஆண்டுகளில் இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்துள்ள மெஸ்ஸி, நீண்ட காலத்திற்குப் பிறகு வெற்றியை ருசித்துள்ளார்.

இதையும் படிங்க: கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

Last Updated : Jul 11, 2021, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.