அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா கடந்த நவம்பர் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்தனர்.
முன்னதாக டியாகோ மாரடோனாவுக்கு நவம்பர் 3ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி வீடு திரும்பினார். ஆனால் சில நாட்களிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததினால், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக அர்ஜெண்டினா காவல்துறையினர் சந்தேகித்தனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு மாரடோனாவின் தனி மருத்துவர் லியோபோல்டோ லுக்கியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொனடர். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தான ஆவாணங்கள் கிடைத்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாரடோனாவின் மற்றோரு தனி மருத்துவரான வாடிம் மிஷன்சுக்கின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அர்ஜெண்டினா காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மாரடோனாவின் சிகிச்சை முறை மற்றும் அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் குறித்த விசாரணையை மேற்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மாரடோனாவுக்கு மரியாதை செலுத்திய போகா ஜூனியர்ஸ்; கதறியழுத மாராடோனா மகள்!