நடப்பு சீசனுக்கான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில், இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நேற்று நடைபெற்ற குரூப் எஃப் பிரிவுக்கான போட்டியில் பார்சிலோனா அணி, இன்டர் மிலனுடன் மோதியது.
முன்னதாக, பார்சிலோனா அணி குரூப் எஃப் பிரிவில் விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு டிரா என 11 புள்ளிகள் எடுத்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம், லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான எல் கிளாசிகோ போட்டி நடைபெற இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், இப்போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் மெஸ்ஸி, டிஃபெண்டர் பிக்யூ, கோல்கீப்பர் மார்க் ஆண்ட்ரே டெர்ஸ்டேகன், நடுகள வீரர் புஸ்கட்ஸ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
இதனால், இளம் வீரர்கள் கொண்ட அணியுடன் களமிறங்கிய பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது. இதில், பார்சிலோனா வீரர் கார்லோஸ் பெரேஸ் 23ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதற்குப் பதிலடி தரும் விதமாக இன்டர் மிலன் அணியின் ஸ்டிரைக்கர் ரோமிலு லூகாகு 44ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கிய பார்சிலோனா அணியின் 17 வயது இளம் வீரர் அன்சு ஃபாடி 86ஆவது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். தனது 17 வயது 40ஆவது நாட்களில் அவர் இந்த கோல் அடித்ததன் மூலம், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
-
🔵🔴 Record breaker! Ansu Fati becomes the youngest goalscorer in #UCL history 👏👏👏 pic.twitter.com/NBegn92een
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🔵🔴 Record breaker! Ansu Fati becomes the youngest goalscorer in #UCL history 👏👏👏 pic.twitter.com/NBegn92een
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2019🔵🔴 Record breaker! Ansu Fati becomes the youngest goalscorer in #UCL history 👏👏👏 pic.twitter.com/NBegn92een
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2019
இதனால், இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஒலிம்பியாகஸ் வீரர் பீட்டர் ஒஃபாரியினின் (17 வயது 195 நாட்கள்) சாதனை முறியடிக்கப்பட்டது. இப்போட்டியில் இன்டர் மிலன் தோல்வி அடைந்ததன் மூலம், விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு டிரா, மூன்று தோல்வி என ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்ததால், குரூப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!