சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், இன்று (ஜூன்.16) பகிர்ந்துள்ள ட்விட்டில்," யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம்.
ரொனால்டோவின் செயல் விலைமதிப்பற்றது
கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும். இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 30,000 கோடி ரூபாய் சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது" என போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலை 'ரியல் சிக்ஸ்ர்' எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
கோகோ கோலா வீழ்ச்சி
நேற்று (ஜூன்.15) ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், ரொனால்டோ கோகோ கோலா பாட்டிலை மாற்றிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையுடன் கூடிய பாராட்டைப் பெற்றது.
இந்த நிகழ்விற்குப் பிறகு கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தின் விற்பனை நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் இந்திய மதிப்பு 29 ஆயிரத்து 354 கோடி ரூபாய் ஆகும். இதனால் கோகோ கோலாவின் பங்கு திடீரென 1.6% வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையும் படிங்க: 'தண்ணியைக் குடி' - ரொனால்டோவின் மாஸ் பதிலால் சரிவைச் சந்தித்த கோகோ கோலா