நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்ஸீ அணி, பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு அணி வீரர்களும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தினர்.
இதில் செல்ஸீ அணியைச் சேர்ந்த சீசர் அஸ்பிலிகுயெட்டா (ceasar azpilicueta) ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து முயற்சித்த பிரைட்டன் அணியால் முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் செல்ஸீ அணி 1- 0 என்ற கோல்கணக்கில் முன்னிலைப்பெற்றிருந்தது. அதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரைட்டன் அணி தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தியது.
இதனால் ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் பிரைட்டன் அணியின் அலிரேஸா ஜஹான்பாக்ஷ்(Alireza Jahanbakhsh) கோல் அடித்து அசத்த, செல்ஸீ அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது. பின் இரு அணிகளும் கடும் முயற்சி செய்தும் இறுதியில் கோல் அடிக்கவில்லை.
-
The points are shared on the south coast... #BHACHE pic.twitter.com/apuJhNwAU5
— Chelsea FC (@ChelseaFC) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The points are shared on the south coast... #BHACHE pic.twitter.com/apuJhNwAU5
— Chelsea FC (@ChelseaFC) January 1, 2020The points are shared on the south coast... #BHACHE pic.twitter.com/apuJhNwAU5
— Chelsea FC (@ChelseaFC) January 1, 2020
இதனால் செல்ஸீ - பிரைட்டன் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் செல்ஸீ அணி 36 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், பிரைட்டன் அணி 24 புள்ளிகளுடன் 14ஆம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: அஸ்வினின் மான்கட் ட்வீட்டிற்கு நோஸ்கட் தந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!