ETV Bharat / sports

ஏ.எஃப்.சி யு -16 சாம்பியன்ஷிப்: குரூப் சி பிரிவுக்கு முன்னேறிய இந்தியா!

ஏ.எஃப்.சி. யு -16 சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குரூப் சி பிரிவுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

afc-u16-championship-india-drawn-in-group-c-alongside-south-korea-australia-and-uzbekistan

author img

By

Published : Jun 19, 2020, 2:27 AM IST

2020ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடைபெறவுள்ள ஏ.எஃப்.சி. (ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப்) யு-16 சாம்பியன்ஷிப் இறுதித் தொடரில் விளையாட இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி இடம்பிடித்துள்ள குரூப் சி பிரிவில் கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இந்தத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் 2021ஆம் ஆண்டு பெருவில் நடைபெறும் ஃபிஃபா யு -17 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும்.

முன்னதாக, தகுதிச்சுற்றில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி உஸ்பெகிஸ்தான், பஹ்ரைன், துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோதியது. அதில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் 11 கோல்களை அடித்து, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இது ஏ.எஃப்.சி யு -16 இறுதித் தொடக்கு இந்திய அணி தொடர்ச்சியாகத் தகுதிபெறும் மூன்றாவது முறையாகும்.

இதுகுறித்து இந்தியா யு -16 அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிபியானோ பெர்னாண்டஸ் கூறுகையில், "இறுதிப்போட்டி ஆரம்பத்திற்கு முன் நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. இந்த வயதில் வீரர்கள் அனைத்து அணிகளுக்கும் எதிராக விளையாடுவது கடினம். ஒரு அணியாக எங்களை நாங்கள் மெருகேற்றியிருக்கிறோம். என்னைப் போலவே அணி வீரர்களும் இனிவரப் போட்டிகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

நாங்கள் கடைசியாக உஸ்பெகிஸ்தான் அணியுடன் விளையாடும்போது தான் ​​அவர்கள் வலுவான அணி என்பதை நாங்கள் உணர்ந்தோம். தகுதிச்சுற்றுக்கும் யு-16 இறுதித் தொடருக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. எனவே அணி வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள போதுமான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எந்தச் சவாலுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.